5ஜி சேவை கூடுதலாக 27 நகரங்களில் இன்று முதல் தொடக்கம் - ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இன்று முதல் கூடுதலாக 27 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்  https://www.dailythanthi.com/News/India/jio-5g-launch-in-50-cities-reliance-jio-action-885301
கோப்புப்படம் https://www.dailythanthi.com/News/India/jio-5g-launch-in-50-cities-reliance-jio-action-885301
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் முறையாக 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், தொடர்ந்து தனது ஜியோ 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி இன்று முதல் கூடுதலாக 27 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை 13 மாநிலங்களில், 331 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 22 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com