

புதுடெல்லி,
தற்போது, நாடு முழுவதும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை அமலில் உள்ளது. 5ஜி சேவையை கொண்டு வருவதற்காக, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், 5ஜி ஸ்பெக்ட்ரம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலம் விடப்படும். முடிந்தால், ஜனவரி மாதமே ஏலம் விட முயன்று வருகிறோம்.
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இத்தொழிலில் தாக்குப்பிடிக்க முடியும். இன்னும் நிறைய சீர்திருத்தங்கள் வர இருப்பதால், புதிய நிறுவனங்களும் இத்தொழிலுக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.