இந்தியாவில் தெருவில் சுற்றித்திரியும் 6.2 கோடி நாய்கள் - ஆய்வில் தகவல்

இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தெருவில் சுற்றித்திரியும் 6.2 கோடி நாய்கள் - ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் வீடற்ற செல்லப் பிராணிகளின் நிலை பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்றநிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது.

அதே சமயம் சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com