பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி

பஸ் மீது லாரி மோதிய சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 killed as truck hits bus on expressway in Gujarat's Anand
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள சிகோத்ரா கிராமத்திற்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆமதாபாத் நோக்கி தனியார் சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் பஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. டயர் மாற்றும் போது பயணிகள் சிலர் இறங்கினர், அவர்களில் சிலர் பஸ்சின் முன் காத்திருந்தனர்.

அப்போது அதே வழியாக வேகமாக வந்த லாரி திடீரென பஸ்சின் பின்னால் அதிபயங்கரமாக மோதியது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com