குஜராத்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி

தனியார் வேன் லாரி மீது மோதிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
Published on

காந்திநகர்,

குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் தனியார் வேன் லாரி மீது மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் மக்னாட் கிராமத்திற்கு அருகிலுள்ள ஜம்புசார்-அமோத் சாலையில் வேதாச் கிராமத்தை சேர்ந்த 10 பேர் சுக்லதீர்த் நோக்கி சென்றபோது விபத்து நடந்ததாக ஜம்புசார் காவல் நிலைய ஆய்வாளர் ஏவி பனாமியா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மக்னாட் கிராமத்திற்கு அருகே சாலையின் இடது புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி சென்ற தனியார் வேன் மோதியது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஜம்புசாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஜெய்தேவ் கோஹில் (23), சரஸ்வதி கோஹில் (21), ஹன்சா ஜாதவ் (35), சந்தியா ஜாதவ் (11), விவேக் கோஹில் (16), கீர்த்தி கோஹில் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com