மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 பேர் பலி
Published on

மால்டா,

மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டம் சுஜாப்பூர் பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலைக்குள் நேற்று காலை 11:30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஐந்து பேரில் ஒருவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது.

கனரக இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் தீ விபத்துக்கான காரணம் என்றும், இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தன்கர் கூறுகையில், மாநிலத்தில், சட்ட விரோதமாக வெடிகுண்டு தயாரிக்கப்படுவதை, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தடுக்க வேண்டும்; பிளாஸ்டிக் தொழிற்சாலை விபத்து குறித்து, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com