இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு - இந்தியா இரங்கல்

இஸ்தான்புல் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு - இந்தியா இரங்கல்
Published on

இஸ்தான்புல்,

துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடுப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லின் பிரதான நடைபாதை வீதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்கு பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளதால், வார இறுதி நாட்களில் இங்கு ஏராளமானோர் காணப்படுவர். இங்கு இதற்கு முன் 2015 மற்றும் 2017ல் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக துருக்கி அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் எங்களது அனுதாபங்கள். அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com