உத்தரபிரதேசத்தில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சுட்டுப்பிடிப்பு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரயாக்ராஜ் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடிக்கடி நடந்து வரும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை 10 நாட்களில் பிடிக்குமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
உத்தரபிரதேசத்தில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சுட்டுப்பிடிப்பு.
Published on: 

உத்தரபிரதேசம்,

உத்தரபிரதேச மாநிலத்தில் அடிக்கடி நடந்து வந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

கொள்ளை கும்பலை பிடிக்க டி.ஜி.பி. உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரயாக்ராஜ், பரைச், பஸ்தி, கோண்டா, லக்கிம்பூர்கேரி ஆகிய 6 மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. 10 நாட்களில் கொள்ளை கும்பலை பிடிக்குமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

3 பேர் கைது, ஒருவர் குண்டு காயம்

இதற்கிடையே, நண்பரா-கைரிகாட் சாலையில் கொள்ளை கும்பல் 2 வாகனங்களில் செல்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று வாகனங்களை மறிக்க முயன்றனர். அப்போது. கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் சுட்டனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் குண்டு காயம் அடைந்தார். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

3 பேர் கைது, 2 பேர் குண்டு காயம்

மேலும் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையைத் தொடர்ந்து, 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கும் 2 கொள்ளையர்கள் காயம் அடைந்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com