பீகாரில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகாரில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணியில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பீகாரில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on

ககாரியா,

பீகார் மாநிலத்தில் ககாரியா நகரில் சண்டி தோலா பகுதியில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்த நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

இதில் சிக்கி கொண்ட தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com