பணக்காரனாக வாழ ஆசைப்பட்டு சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்கள்

பணக்காரனாக வாழ ஆசைப்பட்டு சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்கள்
பணக்காரனாக வாழ ஆசைப்பட்டு சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்கள்
Published on

புதுடெல்லி

டெல்லியில் லோதி காலணி பகுதியில் ஆறு வயது சிறுவன் கழுத்தறு பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இளைஞர்கள் கொலை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை செய்ததில் பணக்காரனாக வாழ கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாகவும் அதனால் சிறுவனை கொன்றதாகவும் கூறியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com