சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல் காந்தி


சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல் காந்தி
x

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று முன் தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்றார். வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அம்மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டம் கொன்வால் கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அங்குள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

அப்போது, ரவிதாஸ் சிங்கின் 6 வயது மகன் அம்ரித்பால் என்ற சிறுவன் வெள்ளத்தின் தனது சைக்கில் சேதமடைந்துவிட்டதாக ராகுல் காந்தியிடம் கூறி கண்ணீர் விட்டு அழுத்தான். இதையடுத்து சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி புதிய சைக்கில் வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், சிறுவன் அம்ரித்பாலுக்கு ராகுல் காந்தி புதிய சைக்கிள் வாங்கிக்கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அம்ரித்பாலுக்கு புதிய சைக்கிள் வாங்கிக்கொடுக்கப்பட்டதையடுத்து சிறுவனை ராகுல் காந்தி செல்போனில் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சிறுவனிடம் பேசிய ராகுல் காந்தி, புதிய சைக்கிள் நன்றாக உள்ளதா? என்று கேட்டார். அப்போது சிறுவன் சைக்கிள் நன்றாக உள்ளது, அதை வாங்கி தந்ததற்கு ராகுல் காந்தி சிறுவன் நன்றி கூறினார்.

1 More update

Next Story