நாய்கள் துரத்தியதால் விபரீதம்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 6 வயது சிறுவன் - மீட்கும் பணி தீவிரம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஹோஷியார்பூர்,

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே பெஹ்ராம்பூர் கிராமத்தில் ரித்திக் என்ற 6 வயது சிறுவன், வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சில நாய்கள் சிறுவனை துரத்தவே, இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கிருந்த ஓடியுள்ளான்.

அப்போது அங்கிருந்த ஆழ்துளைக் கிணறு ஒன்று சணல் பையால் மூடியிருப்பதை கவனிக்காமல் அதில் கால் வைத்ததில் உள்ளே விழுந்தான். சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. சிறுவன் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஹோஷியார்பூரில், 6 வயது சிறுவன் ரித்திக் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். சிறுவனை மீட்கும் பணி குறித்து நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com