மராட்டியத்தில் கொரோனாவால் 60 பேர் பலி: இன்று மேலும் 2,949 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 2,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் கொரோனாவால் 60 பேர் பலி: இன்று மேலும் 2,949 பேருக்கு தொற்று உறுதி
Published on

மும்பை,

மராட்டியத்தில் புதிதாக 2,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 83 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,269 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் தொற்று பாதிப்பில் இருந்து 4,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17 லட்சத்து 61 ஆயிரத்து 615 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 72 ஆயிரத்து 383 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 93.54 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.56 சதவிகிதமாக உள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com