இந்தியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் நேற்று புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று அது சற்று குறைந்தது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 919 ஆக உயர்ந்தது.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 5 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 1,503 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்தனர். நேற்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 928 ஆக உயர்ந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com