7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி

7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி
Published on

பெங்களூரு, 

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது பட்ஜெட் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியாவது:-

உபரி பட்ஜெட்

அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வழங்கும் அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள் அமல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளார். இன்னும்கூடுதலாக நிதி தேவைப்பட்டால் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.ரூ.402 கோடி உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். கடந்த ஆண்டு ரூ.14 ஆயிரத்து 699 கோடி பற்றாக்குறை இருந்தது. தற்போது அதை சரிசெய்துள்ளோம். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியை விட கர்நாடகத்தில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. கர்நாடக வரி வருவாயில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூலில் கர்நாடகம் நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது.

மிக முக்கியம்

நேர்மையான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது மிக முக்கியம். கடந்த 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பட்ஜெட் அளவில் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட ரூ.43 ஆயிரத்து 462 கோடி அதிகரித்துள்ளது. ஆதிதிராவிடர் மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.30 ஆயிரத்து 215 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com