நாட்டில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா மாதிரிகள் 60.44 கோடி

நாட்டில் இதுவரை 60.44 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
நாட்டில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா மாதிரிகள் 60.44 கோடி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, தொடர்ந்து பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் 27ந்தேதி வரை (நேற்று) நடத்திய கொரோனா மாதிரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 90 ஆயிரத்து 900 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை நடந்த மொத்த கொரோனா மாதிரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 60 கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 405 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com