கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 6,049 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று மேலும் 6,049 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 6,049 பேருக்கு கொரோனா தொற்று
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, கேரளாவில் மேலும் 6,049 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று மேலும் 5,057 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை மொத்தமாக 6,50,836 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலத்தில் 61,468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com