'கல்விக்கு வயது ஒரு தடையல்ல'- 61 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர் நீட் தேர்வில் தேர்ச்சி

சிவப்பிரகாசம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இடஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249-வது இடம் பிடித்துள்ளார்.
'கல்விக்கு வயது ஒரு தடையல்ல'- 61 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர் நீட் தேர்வில் தேர்ச்சி
Published on

சென்னை

'கல்விக்கு வயது ஒரு தடையல்ல' என்பதை நிரூபித்தவர் சிவப்பிரகாசம். தர்மபுரியைச் சேர்ந்த 61 வயதான சிவப்பிரகாசம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சிவப்பிரகாசம் நீட் தேர்வில் வெற்றி பெற்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கவுன்சிலிங்கிற்காக வந்துள்ளார்.

சிவப்பிரகாசம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இடஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249-வது இடம் பிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''டாக்டராக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதினேன்.

வெற்றியும் பெற்றுள்ளேன்.என்னால் நீண்ட நாட்களாக மருத்துவ சேவை செய்ய முடியவில்லை.எனது வாய்ப்பை வேறொரு மாணவருக்கு வழங்க யோசித்து வருகிறேன்'' என கூறினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசத்தின் மாணவர் ஒருவர் 5வது ரேங்க் பெற்று அதே கவுன்சிலிங் கலந்தாய்வில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com