சட்டீஷ்கரில் 62 நக்சலைட்டுகள் சரண் ! பாதுகாப்பு படைக்கு ராஜ்நாத்சிங் பாராட்டு

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சட்டீஷ்கரில் 62 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
சட்டீஷ்கரில் 62 நக்சலைட்டுகள் சரண் ! பாதுகாப்பு படைக்கு ராஜ்நாத்சிங் பாராட்டு
Published on

ராய்பூர்,

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சட்டீஷ்கரில், 62 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். நாரயண்பூர் மாவட்டத்தில், சரண் அடைந்த நக்சலைட்டுகள் தங்களின் ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். பஸ்தார் ஐ.ஜி., விவேகானந்தா சின்கா, நாராயண்பூர் எஸ்.பி., ஜிதேந்திர சுக்லா ஆகியோர் முன்பு மேற்கூறிய நக்சல்கள் சரண் அடைந்தனர்.

இது போன்ற விஷயம் வரவேற்கத்தக்கது. இன்னும் பலர் சரண் அடைவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

நக்சலைட்டுகள் சரண் அடைந்ததை வரவேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்த மிகப்பெரும் சாதனைக்காக மாநில முதல்வர் ராமன்சிங், டிஜிபி மற்றும் காவல்துறைக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சட்டீஷ்கரில் வரும் நவம்பர் 12 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com