கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 94.3 % ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 94.3 % ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 94.3 % ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை
Published on

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 94.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் அதாவது ஜூன் 1-7 வரையில் பாதிப்பு விகிதம் 6.3 சதவிகிதம் குறைந்துள்ளது.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒருவாரத்தில் 65 சதவிகிதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக 322 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com