ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

ரெயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வே மண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடர்பாக பெங்களூருவில் உள்ள ரெயில்வே தேர்வு வாரியத்திடம் கலந்து பேசி 51 பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களை அனைத்து மண்டலங்களும் திருத்தி, ஆன்லைன் அமைப்பில் பதிவேற்ற வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரம் ரெயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இதைவிட அதிகம் உள்ளது என்றாலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ரெயில்வே துறையில் ஊழியர்களுக்கு உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ரெயில்வே துறையின் இந்த நடவடிக்கையை சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பராமரிப்பாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. ரெயில்வே துறையின் பாதுகாப்புக்கு இது சரியான நடவடிக்கை என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com