கேரளாவில் இன்று மேலும் 6,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.20 லட்சத்தை தாண்டி உள்ளது.
கேரளாவில் இன்று மேலும் 6,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் இன்று புதிதாக 6,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,13,555 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,848 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,793 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை மொத்தம் 4,41,523 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 76,927 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com