6 நாட்களுக்குள் 10 லட்சம் தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை

10 லட்சம் தடுப்பூசியை மிக வேகமாக எட்டிய நாடு இந்தியா, இதை 6 நாட்களுக்குள் நாம் சாதித்துள்ளோம் என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.
படம்: ANI
படம்: ANI
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு போட திட்டமிடப்பட்டு உள்ளது.தடுப்பூசி திட்டம் தொடங்கிய 14-வது நாளான இன்று மதியம் வரை வரை 25 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-

இன்று பிற்பகல் 2 மணி வரை கிடைத்த தகவல்களின்படி, இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

அதுபோல் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது, தற்போது நாட்டில் 1,75,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மற்றும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் அதிகமான பேர் சிகிச்சையில் உள்ளனர். மராட்டியத்தில் 44 ஆயிரம் பேரும் கேரளாவில் 72 ஆயிரம் பேரும் சிகிச்சையில் உள்ளனர்.மொத்தத்தில், இந்த மாநிலங்களில் 67 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முதல் 10 லட்சம் தடுப்பூசியை மிக வேகமாக எட்டிய நாடு இந்தியா, இதை 6 நாட்களுக்குள் நாம் சாதித்துள்ளோம். 10 நாட்களில் அமெரிக்கா, 12 நாட்களில் ஸ்பெயின், 14 நாட்களில் இஸ்ரேல், 18 நாட்களில் இங்கிலாந்து, 19 நாட்களில் இத்தாலி, 20 நாட்களில் ஜெர்மனி மற்றும் 27 நாட்களில் ஐக்கிய அரபு எமிரட்சில் போடப்பட்டு உள்ளது.

உலகளாவிய தடுப்பூசி தரவரிசையில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது

50 நாட்களுக்கு மேலாக தடுப்பூசி போடும் நாடுகளை தரவு காட்டுகிறது. இந்தியா வெறும் 11 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டு வருகிறது. 11 மாநிலங்கள் தங்கள் மொத்த சுகாதார ஊழியர்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளன.

ஒடிசா,அரியானா போன்ற மாநிலங்கள் தங்களது 50 சதவீத சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளன . ஜார்கண்ட், டெல்லி, தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் போன்ற நோய்த்தடுப்பு இலக்கு 20 சதவீதத்திற்குள் இருக்கும் இந்த மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.

தற்போது, இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறது, ஆனால் ஜூலை மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது, ஒவ்வொரு நபருக்கும் 2 டோஸ் தேவைப்படுகிறது, அதாவது இப்போதிருந்து தினமும் கிட்டத்தட்ட 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com