மகளிர் விடுதிக்குள் புகுந்து எம்.பி.ஏ. மாணவியை பலாத்காரம் செய்த 67 வயது முதியவர் - ஒடிசாவில் அதிர்ச்சி

தீபக் பிரதான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளிர் விடுதிக்குள் புகுந்து எம்.பி.ஏ. மாணவியை பலாத்காரம் செய்த 67 வயது முதியவர் - ஒடிசாவில் அதிர்ச்சி
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கங்காபதா பகுதியை சேர்ந்தவர் தீபக் பிரதான்(வயது 67). இவர் அப்பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடைக்கு அருகில் ஒரு மகளிர் விடுதி உள்ளது. அந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் பலர் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24-ந்தேதி அந்த மகளிர் விடுதிக்குள் தீபக் பிரதான் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த எம்.பி.ஏ. மாணவி ஒருவரை தீபக் பிரதான் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து இன்போ வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் தீபக் பிரதான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மகளிர் விடுதிக்குள் தீபக் பிரதான் எப்படி அத்துமீறி நுழைந்தார் என்பது குறித்து சி.சி.டி.வி. ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com