மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை

மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை
Published on

வடக்கு 24 பர்கானாஸ்,

மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் நகரில் தராலி தக்ஷிண் படா பகுதியில் வசித்து வந்தவர் பகுல் காஜி (வயது 37). வங்காளதேச எல்லை வழியே சட்டவிரோத வகையில் வெள்ளி நகைகளை கடத்த முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.3.43 லட்சம் என கூறப்படுகிறது. இந்த கடத்தலுக்காக ரூ.1,000 பணம் கடத்தல்காரருக்கு கிடைக்கும் என அவர் விசாரணையில் தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com