69-வது பிறந்தநாள்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
69-வது பிறந்தநாள்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடைய பொது வாழ்க்கை, அர்ப்பணிப்பு. ஒழுக்கம் மற்றும் தெளிவான குறிக்கோளால் தொடர்ந்து வழிநடத்தப்படு கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், தேச சேவை யில் நீண்ட ஆயுளுடனும் வாழ நான் பிரார்த்திக்கிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com