7 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய மந்திரி தகவல்

7 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
7 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்காக, பிரதம மந்திரி இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் 2016-ம் ஆண்டு மே 1-ந் தேதி தொடங்கப்பட்டது. அப்போது 2019 மார்ச் மாதத்துக்குள் 5 கோடி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது 2021-ம் ஆண்டுக்குள் 8 கோடி இணைப்புகள் வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.

இதுகுறித்து பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறும்போது, 8 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதில் கடந்த 34 மாதங்களில் இதுவரை 7 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 87 சதவீதம் ஆகும். இதன்படி ஒரு நாளைக்கு சராசரியாக 69 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com