128 கிராமங்களுக்கு 7 நாட்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு

புயல் பாதித்த 128 கிராமங்களுக்கு 7 நாட்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
128 கிராமங்களுக்கு 7 நாட்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு
Published on

புவனேஸ்வர்,

வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே இன்று கரை கடந்தது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது.

இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. மேலும் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் இரவு முழுவதும் தலைமைச் செயலகத்தில் தங்கி இருந்து நிலைமையை கண்காணித்தார். 20 மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு புயல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 72 மணி நேரத்துக்கு பிறகு, புயல் சேதம் குறித்து இறுதி மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக், புயலால் பாதிக்கப்பட்ட 128 கிராமங்களுக்கு 7 நாட்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் முக்கிய சாலைகளில் புயலால் சரிந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்ட கிராம சபை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மருத்துவ ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com