

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் டலி பகுதியில் சட்டவிரோத பட்டாசு குடோன் செயல்பட்டு வந்தது.
இந்த குடோனில் இன்று 7 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது, குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் குடோனில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.