ஜார்க்கண்ட்: லாரி மீது கார் மோதி விபத்து - 7 பேர் பலி

விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
விபத்து
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கட் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கட்ச் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர்.

விபத்து

லரி பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com