அரியானா: கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியானா: கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி
Published on

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் சித்ராவாலி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு கட்டுமான பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 15 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com