சத்தீஷ்கார்: 2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை

சத்தீஷ்காரில் ஜூன் முதல் மாத பாதியில், 2 உயர்மட்ட தலைவர்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
சத்தீஷ்கார்: 2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை
Published on

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜூன் மாத முதல் பாதியில், பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் 2 உயர்மட்ட தலைவர்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால், தடை செய்யப்பட்ட அந்த மாவோயிஸ்டு அமைப்புக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், 2025-ம் ஆண்டு ஜூன் முதல் பாதியில் பிஜாப்பூர் தேசிய பூங்கா பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டு குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.

அவர்களில் மத்திய குழு உறுப்பினரான கவுதம் என்ற சுதாகர், மற்றும் மாநில குழு உறுப்பினரான பாஸ்கர் ராவ் ஆகிய 2 மூத்த மாவோயிஸ்டு தலைவர்களும் அடங்குவார்கள்.

இவர்களில் மகேஷ் கொதியம் என்பவர் இர்பாகட்டா கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக கடந்த மார்ச் வரை இவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com