

ஜக்தல்பூர்,
சட்டீஸ்காரின் ஜக்தல்பூரில் நாராயண்பூர் மாவட்டம் அருகே மதேவாஹி வன பகுதியில் சிறப்பு அதிரடி படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. இந்த சண்டை 2 மணிநேரம் நடந்தது. இதில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் இருந்து அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டன. அதனுடன் 2 ரைபிள்கள், பல்வேறு துப்பாக்கிகள் மற்றும் அதிகளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.