

புதுடெல்லி,
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ வழக்குகள் உட்பட 8 வழக்குகளை, சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில், 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளிடம் வீடியோ கால் மூலமாக ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.