7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
Published on

புதுடெல்லி

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன் படி மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அரசமைப்பு திருத்த சாசன மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com