மராட்டியத்தில் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு; சுகாதார துறை

மராட்டியத்தில் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
மராட்டியத்தில் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு; சுகாதார துறை
Published on

புனே,

மராட்டியத்தில் ஜாய் நகரில் ஆஷ்ரம்ஷாலா பகுதியில் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இதற்கு முன்பு மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜூலையில் முதன்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளான, கண்காணித்தல், சிகிச்சை மற்றும் சுகாதார கல்வி உள்ளிட்ட முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பகல் பொழுதில் ஏடிஸ் வகை கொசுவால் கடிக்கப்படும் மனிதருக்கு இதன் பாதிப்பு தென்படும்.

ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும்.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு அறிகுறி எதுவும் தென்படாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com