7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

முதியவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மக்பரா பகுதியைச் சேர்ந்தவர் மௌலானா முக்தார். முதியவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயதே ஆன சிறுமி ஒருவருக்கு மிட்டாய்களை வாங்கிக் கொடுத்து, சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை அழைந்த்துக்கொண்டு முதியவர் சென்றதால் சந்தேகம் அடைந்த நபர் ஒருவர், முதியவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் முதியவரின் வீட்டின் ஜன்னல் வழியாக அந்த நபர் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அந்த முதியவர், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்க முற்பட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

அதற்குள் அங்கு கூடியவர்கள், முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சிய முதியவர், அவர்களிடமிருந்து தப்பியோடினார். இது தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய முதியவரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com