

பண்டா,
உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த ஜக்திஷ் பால் (வயது 70) என்ற முதியவர், திடீரென சிறுமியை தூக்கிச்சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜக்திஷ் பாலை கைது செய்தனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே பார்வை கோளாறு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
8 வயது சிறுமி 70 வயது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பண்டா மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.