கர்நாடகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 8 ஆயிரத்து 27 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 37 பேருக்கும், மைசூருவில் 8 பேருக்கும், உத்தரகன்னடாவில் 4 பேருக்கும், ஹாசனில் 3 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிவமொக்காவில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களில் 58 பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.24 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com