மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு 74 போலீசார் பலி

மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 74 பேர் பலியாகி உள்ளனர்.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு 74 போலீசார் பலி
Published on

புனே,

இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன.

மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 222 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,714 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5,935 ஆக உயர்ந்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com