திருப்பதியில் பிரதமர் மோடிக்கு 75 அடி உயர ‘கட் அவுட்'... கின்னஸ் சாதனைக்காக 75 மணிநேர தொடர் நிகழ்ச்சி

130 வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை பாராயணம் செய்தனர்.
திருப்பதியில் பிரதமர் மோடிக்கு 75 அடி உயர ‘கட் அவுட்'... கின்னஸ் சாதனைக்காக 75 மணிநேர தொடர் நிகழ்ச்சி
Published on: 

திருப்பதி,

பிரதமர் நரேந்திர மோடியின் 75 வயதில் 25 ஆண்டுகால மக்கள் சேவை மற்றும் அரசியல் பயணத்தை பாராட்டி சேவா ஜோதி இயக்கம் செப்டம்பர் 17-ந்தேதி முதல் நாடு தழுவிய சேவா ஜோதி ஊர்வலத்தை நடத்தி வருகிறது. நேற்று திருப்பதியில் மாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில் ஒரு திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி கொர்ல குண்டா சந்திப்பு வரை நடந்தது.

மேலும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக திருப்பதி தாரகராமா விளையாட்டு மைதானத்தில் 75 மணிநேர பிரமாண்ட தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 அடி உயர 'கட் அவுட்' அமைக்கப்பட்டுள்ளது.

130 வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை பாராயணம் செய்தனர். தொடர்ந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கை, மக்கள் சேவை, சாதனைகளை விளக்கி பேசி வருகின்றனர். 75 மணிநேர தொடர் நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com