

புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தியின் நினைவிடத்திற்கு இன்று பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.