ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரெயில்வே துறையில் பணியாற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது.
ரெயில்வே
ரெயில்வே
Published on: 

புதுடெல்லி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சுமார் 11.5 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.2,009 கோடி செலவாகும் என்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரெயில்வே துறையில் பணியாற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், நிலைய மேலாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

மேலும், ரெயில்வே துறையில் 1.65 லட்சம் பணியிடங்களுக்கான தேவை இருப்பதாகவும், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், 78 நாட்கள் ஊதியமே போனசாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com