ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 11.07 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.1.968.67 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com