

கொல்கத்தா,
7-வது முறையாக என் உயிருக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜிக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி. அதிகாலையில் அவரது வீடு முன்பு திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் பா.ஜனதா தொண்டர்களுக்கு மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து அபிஷேக் பானர்ஜி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனது அலுவலகத்தையும், வீட்டையும் பா.ஜனதா குண்டர்கள் 2 நாட்களாக கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் நின்ற என் ஆதரவாளர் களை ஆணி பொருத்திய கட்டைகளால் தாக்கி உள்ளனர். இது என்னை கொலை செய்வதற்கான சதியின் ஒரு அங்கம்.
என் உயிருக்கு 7-வது முறை யாக குறிவைக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.பி.க்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்ன? ஒரு ஆதரவாளருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டி உள்ளது. மற்றொருவருக்கு எலும்பு முறிவு ஆகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது.