உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் பலி; 27 பேர் காயம்

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகி உள்ளனர். 27 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் பலி; 27 பேர் காயம்
Published on

உத்தர்காஷி,

உத்தரகாண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கங்னானி என்ற பகுதியருகே சென்றபோது, திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

50 மீட்டர் ஆழத்தில் பஸ் விழுந்ததில் பயணிகள் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 27 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 10 பேர் தீவிர காயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பஸ்சில் பயணித்தவர்கள் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். முறையான சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவுகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி பிறப்பித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com