மராட்டியம்: சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த வாகனம் - 8 பேர் பலி

விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
மராட்டியம்: சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த வாகனம் - 8 பேர் பலி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூ கிராமத்தை சேர்ந்த 15 பேர் பிக் அப் வாகனத்தில் நேற்று அம்மாவட்டத்தின் மஸ்வாட்டில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.

கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு அனைவரும் வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

விபத்து

சோலாப்பூர் மாவட்டத்தின் தண்டுல்வாடி கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் அமைந்துள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள், 4 பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com