தெலுங்கானாவில் நக்சல்கள் 8 பேர் போலீசில் சரண்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 355 நக்சல்கள் தெலுங்கானா போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று மராட்டியம் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த 8 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு முலுகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சபரிஷ் முன் சரணடைந்தனர். இது தொடர்பாக முலுகு மாவட்ட போலீசார் கூறியதாவது:

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 355 நக்சல்கள் தெலுங்கானா காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர், இதில் 68 பேர் முலுகு மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். சரணடைந்த நக்சல்களுக்கு தெலுங்கானா அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களைப் பற்றி அறிந்த பிறகு, அவர்கள் நக்சலிசப் பாதையை விட்டு வெளியேறி, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ முடிவு செய்து, காவல்துறையிடம் சரணடைந்தனர்.

தடைசெய்யப்பட்ட நக்சல் அமைப்பின் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லைப் பகுதிகளில் நகர்ந்து வருவதாகவும், எல்லைக் கிராமங்களின் மக்கள் தீவிரவாதிகளுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்றும், நக்சல்களின் நடமாட்டத்தைக் கவனித்தால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com