வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரம் இந்தியர்கள்; மத்திய அரசு தகவல்

வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் என மத்திய வெளிவிவகார இணை மந்திரி இன்று தெரிவித்து உள்ளார்.
வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரம் இந்தியர்கள்; மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற ராஜ்யசபையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளிவிவகார இணை மந்திரி முரளீதரன், அமைச்சகத்திடம் உள்ள தகவலின்படி, விசாரணை கைதிகள் உள்பட வெளிநாட்டு சிறைகளில் உள்ள கைதிகளாக உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 278 என தெரிவித்து உள்ளார்.

இவற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,480 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். இதற்கு அடுத்து சவுதி அரேபியாவில் 1,392 இந்தியர்களும், நேபாளத்தில் 1,112 இந்தியர்களும் கைதிகளாக உள்ளனர்.

சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இந்தியர்கள் மீது போதை பொருள் கடத்தல், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாகிஸ்தானில் 701 இந்தியர்கள் அடைப்பட்டு உள்ளனர். குஜராத் பகுதியில் கடலில் மீன்பிடிக்க சென்று, பாகிஸ்தானிய அமைப்புகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com