பெங்களூருவில் வார இறுதி நாட்களில் 8 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல் - தென்மேற்கு ரெயில்வே தகவல்

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் 8 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூருவில் வார இறுதி நாட்களில் 8 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
Published on

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் பனசங்கரி, ஜெயநகர், கோரமங்களா, கே.ஆர்.மார்க்கெட், ஐகோர்ட்டு, விதான சவுதா, எலெக்ட்ரானிக் சிட்டி, எலகங்கா ஆகிய பகுதிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

இதனால் வருகிற 24-ந் தேதி (நாளை), மற்றும் 25-ந் தேதிகள், அடுத்த மாதம் 1, 2-ந் தேதிகளில் மேற்கண்ட 8 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் மூடப்படும். இதனால் பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை ரெயில் நிலையத்திற்கு வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com